தமிழ்த்தேசிய பேரவையின் இராஜதந்திர சந்திப்பு

தமிழ்த்தேசிய பேரவையின் இராஜதந்திர சந்திப்பு

அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்குடன் சந்திப்பு

தமிழ்த்தேசிய பேரவையின் இராஜதந்திர சந்திப்பு இன்று நடைபெற்றுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழ் தேசிய பேரவையினர் தூதுவர்களுடன் சந்திப்பை மேற்கொண்டனர்.

இன்று பிற்பகல் 1.15 அளவில் அமெரிக்கத் தூதுவருடன் அமகரிக்க தூதரகத்திலும் பிற்பகல் 3.00 மணியளவில் சுவிஸ் தூதுவருடன் சுவிஸ் தூதரகத்திலும் சந்திப்பு நடைபெற்றது..

தமிழ்த் தேசிய பேரவையினர் சுவஸ் தூதுவரடன் சந்தித்தபோது

இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,
தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன்
தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ ஐங்கரநேசன் ஆகியோருடன்

உதயன் பத்திரிகை உரிமையாளர் ஈ. சரவணபவன், சிரேஸ்ட சட்டத்தரணி நடராஜர் காண்டீபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025