இந்து அதிபர் அமைச்சுக்கு இடமாற்றம்

இந்து அதிபர் அமைச்சுக்கு இடமாற்றம்: கொட்டாஞ்சேனை பகுதி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவ விசாரணையின் தொடர்ச்சியாக அவர் கற்ற இராமநாதன் இந்துக் கல்லூரியின் அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவர் கல்வி அமைச்சுக்கு இடமாற்றப்பட்டுள்ளார். கடமைகளைக் கவனிக்க அமைச்சின் அதிகாரி ஒருவர் நியிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு அந்தப் பாடசாலையில் ஆசிரியர் ஒருவர் மாணவியைத் துஷ்பிரயோகம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் விசாரணை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த இடமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து விசாரிக்க மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது, மேலும் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் தற்போது கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
