திருக்கோவில் மருத்துவமனையின் குறைபாடுகள் ஆராய்வு

திருக்கோவில் மருத்துவமனையின் குறைபாடுகள் ஆராய்வு

திருக்கோவில் மருத்துவமனையின் குறைபாடுகள் ஆராய்வு: திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பாக ஆராயும் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது.

கல்முனை திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் மிக நீண்ட காலமாக நிலவிவரும் குறைபாடுகள் நிவர்த்தி செய்வது தொடர்பாக ஆராயும் உயர்மட்ட அபிவருத்திக் குழுக் கூட்டம் வைத்தியசாலையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்துகொண்டோர்

இக்கூட்டமானது திருக்கோவில் ஆதார வைத்திசாலையில் அபிவிருத்திக் குழுவின் ஒழுங்கமைப்பில் வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது வைத்தியசாலையில் காணப்படும் ஆளணி மற்றும் பௌதிக குறைபாடுகள் தொடர்பாக விரிவான தெளிவூட்டலை அபிவிருத்திக் குழுவின் செயலாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கு.ஜெகசுதன் முன்வைத்தார்.

வைத்தியசாலையில் தற்போதய நிலைமைகள் தொடர்பாக வைத்தியசாலையின் அத்தியட்சகர் ஏ.வி.மர்சூத் தமது கருத்துகளை தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், கல்முனை பிராந்தி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி சைகிலாஇஸ்தீன், வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழு உறுப்பினர்களும் ஒன்றிணைந்து வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகளை ஆராய்ந்து தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான தீர்மானங்களை எடுத்தனர்.

திருக்கோவில் எஸ். கார்த்திகேசு

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025