திருக்கோவிலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

திருக்கோவிலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு: இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளுக்குத் தீபச் சுடர் ஏற்றி முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி நினைவேந்தல் திருக்கோவில் பிரதேசத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் இலங்கை தமிழரசு கட்சியினரின் ஏற்பாட்டில் நினைவேந்தல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நினைவேந்தல் நிகழ்வானது திருக்கோவில் 5ஆம் வட்டாரம் கிளையின் ஏற்பாட்டில் அதன் தலைவர் பி.நந்தபாலு தலைமையில் திருக்கோவில் 04 பிரதான வீதியில் இன்று காலை நடைபெற்றது.
இறுதி யுத்தத்தின் போது உயிர் இழந்த உயிர்கள் மற்றும் இறுதி யுத்தத்தில் தமிழர்கள் எதிர்கொண்ட துயரங்களை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சி வழங்கும் நிகழ்வும் வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசங்களில் ஒவ்வொரு வருடமும் மே மாதம் நடைபெற்று வருகின்றது.
அந்தவகையில், திருக்கோவிலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு 16 ஆவது ஆண்டாகவும் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழரசு கட்சியின் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், காரைதீவு முன்னாள் பிரதேச சபை தவிசாளரும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினருமான கே.ஜெயசிறில், கட்சியின் பிரதேச கிளை நிருவாகிகள், தொண்டர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
திருக்கோவில் – எஸ். கார்த்திகேசு
