சங்கிலியன் மன்றத்தின் 80ஆவது ஆண்டுவிழா

சங்கிலியன் மன்றத்தின் 80ஆவது ஆண்டுவிழா: யாழ்ப்பாணம் – நல்லூர் சங்கிலியன் மன்ற சனசமூக நிலையத்தின் 80 ஆவது ஆண்டு விழாவினை முன்னிட்டு பல போட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக சங்கிலியன் மன்ற சனசமூக நிலையத்தினால் நடத்தப்பட்டுவரும் கணினிப் பயிற்சி வகுப்பு மாணவர்களுக்கும், ஆங்கில வகுப்பு மாணவர்களுக்குமிடையே துடுப்பாட்டப் போட்டி அண்மையில் நடைபெற்றது.
செங்குந்தா இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ஆங்கில வகுப்பு மாணவர்களின் அணி வெற்றி பெற்றது.
