பாலியல் வழக்கில் 9பேருக்கு ஆயுள்தண்டனை

பாலியல் வழக்கில் 9பேருக்கு ஆயுள்தண்டனை

பாலியல் வழக்கில் 9பேருக்கு ஆயுள்தண்டனை வழங்கி பொள்ளாச்சி நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட பல பெண்களைத் தொடர்ந்து பல வருடங்களாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாகக் கைதாகியிருந்த ஒன்பது பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகின.

இதனைத் தொடர்ந்து இன்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பொள்ளாச்சி மகளிர் நீதிமன்ற நீதிபதி திருமதி நந்தினிதேவி தீர்ப்பை அறிவித்தார்.

அதில், குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்பட்ட ஒன்பது பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்தார். பாதிக்கப்பட்ட எட்டுப் பெண்களுக்கு 85 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 2016 முதல் 2018 வரை பல பெண்கள் அதுவும் அதிகமானோர் கல்லூரிப் பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர்.

எனினும், 2019 பெப்ரவரி மாதம் 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் செய்த பொலிஸ் முறைப்பாட்டையடுத்து, பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்தது.

ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் முன்வந்து சாட்சியம் அளித்தனர். 250 இற்கும் அதிகமான ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

அதிமுக மாணவர் அணியின் செயலாளர் உட்பட ஒன்பது பேரைக் கைதுசெய்து பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

வன்புணர்வு, கூட்டுப் பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கில், ஒன்பது பேர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபணமாகின.

இந்த வழக்கின் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று மகளிர் அமைப்புள் கண்டன ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியிருந்தனர்.

இந்த நிலையில், பல ஆண்டுகள் நடைபெற்ற வழக்கு விசாரணையின் பின்னர் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

பாலியல் வழக்கில் 9பேருக்கு ஆயுள்தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து மகளிர் அமைப்புகள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் வழக்கின் தீர்ப்பினை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், தமிழக் வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், பாட்டாளி மக்கள் கட்சியின் செயலர் டாக்டர் அன்புமணி ராதாஸ்,

தேதிமுக தலைவி பிரேமலதா விஜயகாந்த், மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பல்வேறு தரப்பினரும் வழக்கின் தீர்ப்பினை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மாநிலங்களில் அவசரகால எச்சரிக்கை நவடிக்கை

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025