பஸ் விபத்தை ஆராய விசேடகுழு

பஸ் விபத்தை ஆராய விசேடகுழு ஒன்றை பதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய நியமித்துள்ளார்.
பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோகண தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்படடுள்ளது. மேலும் நான்கு அதிகாரிகள் உறுப்பினர்களாகச் செயற்படுவர்.
கடந்த மே 11 ஆம் திகதி அதிகாலை 4.30 அளவில் கொத்மலை – கெரண்டி எல்லை பகுதியில் இடம்பெற்ற பயங்கரமான பஸ் விபத்துக்கான காரணத்தை அறிய, விரிவான விசாரணைகளை இந்தக் குழு மேற்கொள்ளும்.
இந்தப் பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதன் காரணத்தை அறிவதுடன் எதிர்காலத்தில் இவ்வாறான விபத்துகளைத் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் இந்தக் குழு பரிந்துரைக்கும்.
கொத்மலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 22 பேர் உயிரிழந்து 37 பேர் காயமடைந்தனர்.