தீயில் கருகி இளம்பெண் மரணம்

தீயில் கருகி இளம்பெண் மரணம் அடைந்த சம்பவமொன்று கொட்டாவை பகுதியில் நேற்றிரவு (12) இடம்பெற்றுள்ளது.
கொட்டாவை, ருக்மல்கம வீதி, விகாரை மாவத்தையிலுள்ள வீடொன்று நேற்றிரவு தீப்பற்றிக்கொண்டது. அந்த வீட்டில் தனியாக இருந்த புதுமினி துரஞ்சா என்ற 19 வயது யுவதி தீயில் சிக்கி மரணமாகியுள்ளார்.
மர்மமான முறையில் ஏற்பட்ட தீவிபத்தை அறிந்த ஊர் மக்கள் திரண்டு சென்று தீயை அணைக்க முயற்சித்தபோது வீடு முற்றாக எரிந்துவிட்டது. யுவதி துரஞ்சாவின் உடல் தீயில் கருகி சிதைவடைந்து கிடந்துள்ளது.
துரஞ்சாவின் தாயும் சகோதரிகளும் வெசாக் பந்தலைப் பார்க்க சென்றிருந்த வேளை இந்தத் தீ அனர்த்தம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை. நுகேகொடை குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- மதிமுரசு