விமானம் ஆற்றில்வீழ்ந்து அறுவர் பலி

விமானம் ஆற்றில்வீழ்ந்து அறுவர் பலி: விமானப்படை கெலி விபத்தில் அறுவர் பலி யானதாக விமானப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி முடித்து வெளியேறும் வைபத்தில் பங்குபற்றிய பெல் 212 கெலிகொப்டர் மாதுறுஓயா ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தச் சந்தர்ப்பத்தில் 12 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக முன்னர் அறிவிக்கப்பட்டது.
எனினும், விமானப் படை வீரர்கள் உட்பட அறுவர் உயிரிழந்துவிட்டதாக விமானப் படைய வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்ப்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று காலை 6.45 அளவில் இடம்பெற்றுள்ளது.
இன்று காலை 6.45 அளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் பற்றி முழுமையாக ஆய்வு நடத்த ஒன்பது பேர் கொண்ட குழுவொன்றை விமானப் படைத் தளபதி நியமித்துள்ளார்.
