கொட்டாஞ்சேனை ஆசிரியர் கட்டாய லீவில்

கொட்டாஞ்சேனை ஆசிரியர் கட்டாய லீவில்: கொட்டாஞ்செனையில் 16 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய, கொழும்பு பம்பலப்பிட்டி ஆசிரியர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார்.

மாணவியைத் துஷ்பிரயோம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இந்த ஆசிரியர் கட்டாய லீவில் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெறுவதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

உயிரிழந்த மாணவிக்கு நீதிகோரி கொழும்புவில் நேற்று பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025