இந்த வெற்றியையும் அமைதியாக கொண்டாடுங்கள்

இந்த வெற்றியையும் அமைதியாக கொண்டாடுங்கள் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தமது ஆதரவாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் ஆகியவற்றில் வெற்றியடைந்த வேளையில் எவ்வாறு அமைதியாகக் கொண்டாடினீர்களோ, அவ்வாறு இந்த வெற்றியையும் கொண்டாடுங்கள் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
வியட்நாம் விஜயத்தை நிறைவுசெய்துகொண்டு வந்து வாக்களித்த ஜனாதிபதி, ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தார்.
இந்தத் தேர்தலிலும் சாதகமான பெறுபேறு கிடைக்கும் என்று ஜனாதிபதி நம்பிககை தெரிவித்தார்.
இந்த நாட்டில் அரசியல் கலாசாரம் மாறியிருக்கிறது. அந்த மாற்றத்திற்கு ஏற்ப நாம் நடந்துகொள்ள வேண்டும் என்றார்.
