நாடு முழுவதும் 62வீதம் வாக்குப் பதிவு

நண்பகல் வரை 35வீத வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாகத் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் 2025 ஆம் ஆண்டின் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் ஆரம்பமாகியுள்ளது.

இன்று (06) காலை 7.00 மணி முதல் 4 மணிவரை 13,759 வாக்களிப்பு நிலையங்களில் வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

இத்தேர்தலில் 17,156,338 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். நண்பகல் வரை 35 வீதம் வாக்குப் பதிவு இடம்பெற்றிருக்கிறது.

49 அரசியல் கட்சிகள், 257 சுயேட்சை குழுக்களைச் சேர்ந்த 75,589 வேட்பாளர்கள் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

நாட்டில் 341 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ள நிலையில், இம்முறை 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கு மாத்திரம் தேர்தல் நடத்தப்படுகிறது.