இரத்தினபுரி மாவட்டத்தில் அமைதியான வாக்களிப்பு

இரத்தினபுரி மாவட்டத்தில் அமைதியான வாக்களிப்பு

இரத்தினபுரி மாவட்டத்தில் அமைதியான வாக்களிப்பு: 2025 உள்ளூராட்சி மன்ற தேர்தல் இரத்தினபுரி மாவட்டத்தில் காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகியது .

689 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு மாலை நான்கு மணிவரை நடைபெற்றது.

வட்டார மூலம் 258 உறுப்பினர்களும் இரட்டை தொகுதி மூலம் 165 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் 932850 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.சகல வாக்களிப்பு நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இதேவேளை, இறக்குவானை தேர்தல் தொகுதியில் இறக்குவானை நகர் பரிசுத்த யோவான் தமிழ் தேசிய கல்லூரியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பு காலை ஏழு மணிமுதல் சுறுசுறுப்பாக நடைபெற்றது.

மக்கள் வரிசையாக நின்று விறுவிறுப்பாக வாக்களிப்பில் ஈடுபட்டனர். வாக்கெடுப்பு நிறைவுற்றதையடுத்து வாக்குகளை எண்ணும் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

எம். சந்திரகுமார், இறக்குவானை

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025