வவுனியாவில் முட்டை வாங்குவதில் கவனம்!

வவுனியாவில் முட்டை வாங்குவதில் கவனம்

வவுனியாவில் முட்டை வாங்குவதில் கவனம் என்று பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.

பட்டாணிச்சூர் பகுதியில் முட்டைக் கடையொன்றில் பழுதடைந்த முட்டைகள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த முறைப்பாட்டையடுத்து அங்குச் சென்ற அதிகாரிகள் ஆயிரத்திற்கும் அதிகமான பழுதடைந்த முட்டைகளைப் பறிமுதல் செய்துள்ளனர்.

பாடசாலைகளுக்கும் பொதுமக்களுக்கும் விநியோகித்த முட்டைகள் பழுதடைந்திருந்ததாகத் தகவல் கிடைத்துள்ளது.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025