ரணசிங்க பிரேமதாசவின் 32ஆவது நினைவேந்தல்

ரணசிங்க பிரேமதாசவின் 32ஆவது நினைவேந்தல்: இலங்கையின் இரண்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அமரர் ரணசிங்க பிரேமதாசவின் 32ஆவது நினைவு நாள் இன்று (01) அனுஷ்டிக்கப்பட்டது.
கொழும்பு, புதுக்கடை பகுதியில் அமைந்துள்ள ரணசிங்க பிரேமதாசவின் உருவச்சிலைக்கு அருகில் நினைவேந்தல் நடைபெற்றது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஹேமா பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் முதலானோர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.