எரிபொருள் விலை நள்ளிரவுமுதல் குறைப்பு

எரிபொருள் விலை நள்ளிரவுமுதல் குறைப்பு: பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
பெட்ரோல் 92 – ஆறு ரூபாயால் குறைக்கப்பட்டுப் புதிய விலை 293 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் 95– 20 ரூபாய் குறைப்பு. புதிய விலை 341 ரூபாய்.
ஒட்டோ டீசல் – 12 ரூபாய் குறைப்பு. புதிய விலை 274 ரூபாய்.
சுப்பர் டீசல்– 6 ரூபாய் குறைப்பு. புதிய விலை 325 ரூபாய்.
மண்ணெண்ணெய் – 5 ரூபாய் குறைப்பு. புதிய விலை 178 ரூபாய்.
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் விலைக்குறைப்புக்கு ஆமைய தனது விலையிலும் மாற்றம் செய்திருப்பதாக, லங்கா ஐ ஓ சி நிறுவனமும் அறிவித்துள்ளது.