தோனிக்கு 400ஆவது ஐபிஎல் போட்டி

தோனிக்கு 400ஆவது ஐபிஎல் போட்டி

தோனிக்கு 400ஆவது ஐபிஎல் போட்டி: ஐபிஎல் 2025 தொடரின் 43ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாக எம்.எஸ். தோனி களம் இறங்குகிறார்.

இந்தப் போட்டி எம்.எஸ். தோனிக்கு ஒட்டுமொத்தமாக 400ஆவது போட்டியாகும். இதன்மூலம் 400 போட்டிகளில் விளையாடிய 4ஆவது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

விராட் கோலி, ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் இதற்கு முன்னதாக 400 போட்டிகளில் விளையாடியுள்ளனர்.

எம்.எஸ். தோனி இந்திய அணிக்காக 98 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஐபிஎல்-லில் இன்றைய போட்டி அவருக்கு 274 போட்டியாகும். சாம்பியன்ஸ் லீக்கில் சிஎஸ்கேவுக்காக 24 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025