பிரியசாத் படுகொலை:மூவர் கைது

பிரியசாத் படுகொலை:மூவர் கைது: சமூக ஆர்வலரும் கொலன்னாவை நகரசபை வேட்பாளருமான டான் பிரியசாத்தின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

தகவல் வழங்கியதாக சந்தேகத்தின் பேரில் மூவர் கைதுசெய்யப்பட்டதாகப் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார.

டான் பிரியசாத் தனது உறவினர் வீட்டில் நடைபாதையில் இருவருடன் விருந்து உண்டுகொண்டிருந்த போது, ​​அந்த இடத்திற்குள் நுழைந்த துப்பாக்கிதாரிகள் சுட்டுவிட்டுத் தப்பி ஓடிவிட்டதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025