டான் பிரியசாத் ஆபத்தான நிலையில்

டான் பிரியசாத் ஆபத்தான நிலையில்: டான் பிரியசாத் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்படவில்லை எனப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கொலன்னாவ, சாலமுல்ல பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்த சந்தர்ப்பத்தில் அரசியல் செயற்பாட்டாளரான டேன் பிரியசாத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவித்திருந்த பொலிஸார், பிரியசாத் சாகவில்லை என்றும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.