இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதலில் 26பேர் பலி

இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதலில் 26பேர் பலி

பயங்கரவாதத் தாக்குதலில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்

இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதலில் 26பேர் பலியானதாகப் பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜம்மு-காஷ்மிர் மாநிலத்தில் உள்ள சுற்றுலாத் தளமொன்றில் பிரிவினைவாதக் குழுவினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26பேர் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்டவர்களின் வௌிநாட்டவர்கள் இருவரும் இந்திய கடற்படை வீரர் ஒருவரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய காலத்தில் நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலாக இன்றைய தாக்குதல் கருதப்படுகிறது.

சம்பவத்தைக் கேள்வியுற்ற பிரதமர் ஶ்ரீ நரேந்திர மோடி தனது சவூதி அரேபிய விஜயத்தை சுருக்கிக் கொண்டு நாடு திரும்புகிறார்.

இதனிடையே உள்துறை அமைச்சர் அமித் ஷா ஶ்ரீநகர் சென்றிருக்கிறார்.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025