பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்

பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார் என்று வத்திக்கான உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தமது 88 ஆவது வயதில் காலமானதாக காணொலி அறிக்கையொன்றின் ஊடாக வத்திகான் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
சுகவீனம் காரணமாக அண்மையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாப்பரசர் பிரான்சிஸ், குணமடைந்து வெளியேறி ஓய்வில் இருந்தார்.
இந்நிலையில், இன்று அவர் காலமானாதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த முதலாவது பாப்பரசரான அவர் 12 ஆண்டுகள் இறை சேவையில் இருந்திருக்கிறார்.
சனி மாற்றமும் வியாழ மாற்றமும்
