தேசிய கட்சிகளுக்குத் தமிழர் தாயகத்தில் இடமில்லை

தேசிய கட்சிகளுக்குத் தமிழர் தாயகத்தில் இடமில்லை

தேசிய கட்சிகளுக்குத் தமிழர் தாயகத்தில் இடமில்லை: இலங்கை தமிழரசு கட்சியின் வீட்டு சின்னத்துக்கு வாக்களிப்பதன் ஊடாக எங்களுடைய தேசியம் சுயநிர்ணயம் சுய ஆட்சி என்பன இன்றுவரை எங்கள் மக்கள் மத்தியிலே இருந்து அகலவில்லை என்று கட்சியின் மானிப்பாய் தொகுதி தலைவர் தியாகராசா பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தேசியக் கட்சிகளுக்கும் சிங்கள கட்சிகளுக்கும் தமிழர் தாயகப் பிரதேசத்தில் இடமில்லை என்ற செய்தி எதிர்வரும் 06 ஆம் திகதி சொல்லப்படும் என்றும் பிரகாஷ் கூறினார்.

எங்களுடைய பிரதேச மக்களும் பெருவாரியாக ஒவ்வொரு வட்டாரத்திலும் பெருவாரியாக உங்களுடைய தமிழரசுக் கட்சியைச் சார்ந்த பிரதிநிதிகளை வேட்பாளர்களை வெல்ல வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும் அவர் கூறினார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கான தேர்தல் அலுவலகம் இன்று மாலை யாழ் உடுவில் பகுதியில் திறந்து வைத்து உரை ஆற்றும் போதே தியாகராஜா பிரகாஷ் இவ்வாறு தெரிவித்தார்

இந்நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மானிப்பாய் தொகுதி தலைவர் தியாகராஜா பிரகாஷ், கட்சியின் சார்பில் வலிகாமம் பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மாமனிதர் கிட்டிணன் சிவநேசன் நினைவுப்பேருரை

வைர வர்த்தகர் பெல்ஜியத்தில் கைது

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025