குண்டும் குழியுமா குன்றும் குழியுமா?

குண்டும் குழியுமா குன்றும் குழியுமா?

குண்டும் குழியுமா குன்றும் குழியுமா?: தமிழ் மொழியின் தனிச் சிறப்பு இணை மொழிகள் என்றால் மிகையில்லை. ஆனால், இந்த இணை மொழிகளைச் சிலசமயம் நாம் தொன்றுதொட்டுப் பிழையாகவே வழங்கி வருகிறோம்.

அதற்குச் சிறந்த உதாரணம் குண்டும் குழியும் அல்லது குன்றும் குழியும். அநேமானோர் இந்த இணை மொழியைப் பிழையாகவே வழங்கி வருகின்றனர். அதாவது குன்றும் குழியும் என்பதைச் சரியென்று அவர்கள் வாதிடுகின்றனர்.

வீதி சேதமடைந்து கற்கள் நிறைந்து காணப்படும். இடைக்கிடை குழியும் காணப்படும். அந்தத் தாறுமாறாகக் கிடக்கும் கற்கள்தான் குண்டுகள். குண்டு என்றால், பூரணப்படுத்தப்படாத கல் என்றும் ஒரு பொருள் உண்டு.

ஆகவே, வீதியில் கிடப்பது குண்டுகள்தான். சில இடங்களில் குழிகளும் இருக்கலாம். ஆனால்,நிச்சயமாக குன்றுகள் இருக்க வாய்ப்பில்லை. குன்று என்றால் மலை. எனவே, பழுதடைந்த வீதியில் குண்டன்றிக் குன்று இருக்காது என்பதைப் புரிந்துகொள்வோம்.

வைர வர்த்தகர் பெல்ஜியத்தில் கைது

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025