நாகபூசணியின் நூல் வெளியீட்டு விழா

நாகபூசணியின் நூல் வெளியீட்டு விழா: இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தென்றல் எப்.எம். உதவிப் பணிப்பாளர்-சிரேஷ்ட ஒலிபரப்பாளர், கவிஞர்- நாகபூஷணி கருப்பையா எழுதிய என். எஸ். எம். இராமையா எனும் நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 26ஆம் திகதி பிற்பகல் மூன்று மணிக்கு நடைபெறுகிறது.
அஞ்சல் திணைக்களத் தலைமையகக் கேட்போர் கூடத்தில் நடைபெறும் நூல் வெளியீட்டு விழாவுக்கு எழுத்தாளர் – சட்டத்தரணி பதுளை சேனாதிராசா தலைமை தாங்குகிறார்.
நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக மீன்பிடித்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்துகொள்கிறார்.
சிறப்பு விருந்தினர்களாக சிரேஷ்ட ஒலிபரப்பாளர் பீ. எச். அப்துல் ஹமீது, இ. ஒ. கூ தலைவர் பேராசிரியர் உதித்த கயாஷான் குணசேகர, தமிழ்ச் சேவைப் பணிப்பாளர் ஆர். கணபதிப்பிள்ளை ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

செப்புப் பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால்?
