வியாழக்கிழமை வெப்பம் அதிகரிக்கும் சாத்தியம்

வியாழக்கிழமை வெப்பம் அதிகரிக்கும் சாத்தியம்; நாட்டின் பல பகுதிகளில் வியாழக்கிழமை (17) வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய அளவில் மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, வடமேல், சப்ரகமுவ தென், கிழக்கு ஆகிய மாகாணங்களிலும் இரத்தினபுரி, மொனராகல ஆகிய மாவட்டங்களிலும் மனித உடலுக்கு உணரும் அளவில் வெப்பநிலை அதிகரிக்க கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், கடுமையான வெளிப்புற செயல்பாடுகளை மட்டுப்படுத்தவும், போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
கடவுச்சீட்டு வழங்கும் பணியில் மட்டுப்பாடு
