தமிழ்நாட்டில் மாநில சுயாட்சி கோரிக்கை!

தமிழ்நாட்டில் மாநில சுயாட்சி கோரிக்கை!

தமிழ்நாட்டில் மாநில சுயாட்சி கோரிக்கை: மாநிலத்தின் நியாயமான உரிமைகளைப் பாதுகாப்பது, மத்திய – மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளைத் தருவதற்கு குழு ஒன்றை அமைத்திருக்கிறது தமிழ்நாடு

தற்போது நடந்து வரும் தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடரில், செவ்வாய்க் கிழமையன்று 110-வது விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசு தொடர்ந்து மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பறித்து வருவதாகவும், மத்திய அரசிடம் அதிகாரங்கள் குவிக்கப்பட்டு வருவதாகவும் விமர்சித்தார்.

இதைப்பற்றி ஆராய மூன்று பேர் கொண்ட உயர் மட்டக் குழுவை அமைப்பதாக அறிவித்திருக்கிறார்.

இந்தக் குழுவின் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் குரியன் ஜோசப்பும், உறுப்பினர்களாக இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் முன்னாள் அதிகாரியுமான அசோக் வர்தன் ஷெட்டி, தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவர் பேராசிரியர் மு.நாகநாதன் ஆகியோர் இருப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

.தமிழ்நாட்டில் மாநில சுயாட்சி கோரிக்கை முன்வைப்பது இது முதன்முறையன்று. 1969 இலிருந்து காலத்துக் காலம் இவ்வாறான கோரிக்கை முன்வைக்கப்பட்டிருப்பதோடு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

எனினும், தமிழ்நாட்டு அரசின் கோரிக்கையையோ அல்லது குழுக்களையோ இந்திய மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இப்போது மாநில ஆளுநர் ஆர். என். ரவியுடனான முரண்பாட்டையடுத்து மத்திய அரசுடனான உறவும் சற்று விரிசலடைந்திருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பத்து சட்ட மூலங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்துத் தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசுக்குச் சார்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

இந்திய மத்திய அரசாங்கத்தை இப்போதெல்லாம் ஒன்றிய அரசு என்றே தமிழகம் விளித்து வருகிறது. சுயாட்சி தத்துவம் நிறைந்த அரசுளைக் கொண்ட ஒன்றிய அரசு என்று இந்திய மத்திய அரசைத் தமிழகம் அழைக்கிறது.

இந்த நிலையில், மாநில சுயாட்சி குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள இந்தக் குழுவின் அறிக்கை முதலில் ஓர் இடைக்கால அறிக்கையை வழங்கும். ஈராண்டுகளில் இறுதி அறிக்கையைச் சமர்ப்பிக்கும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

வைர வர்த்தகர் பெல்ஜியத்தில் கைது

வைர வர்த்தகர் பெல்ஜியத்தில் கைது

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025