சங்கிலியன் சனசமூக நிலையம் வெற்றி

சங்கிலியன் சனசமூக நிலையம் வெற்றி: தமிழ் சிங்கள புத்தாண்டையொட்டி சங்கிலியன் சனசமூக நிலையத்திற்கும் திருநெல்வேலி வாலையம்மன் சனசமூக நிலையத்திற்குமிடையில் நடைபெற்ற துடுப்பாட்டப் போட்டியில் நல்லூர் சங்கிலியன் சனசமூக நிலையம் வெற்றிக் கிண்ணத்தைச் சுவீகரித்துக்கொண்டது.
யாழ்ப்பாணம் -நல்லூர் சங்கிலியன் சனசமூக நிலையத்திற்கும் திருநெல்வேலி வாலையம்மன் சனச மூக நிலையத்திற்கும் இடையே வருடா வருடம் தமிழ் சிங்கள புது வருடப் பிறப்பினையொட்டி துடுப்பாட்டப்போட்டி நடைபெறும்.
அந்த வரிசையில் 2025ஆம் ஆண்டு சித்திரை புது வருடப் பிறப்பன்று (14) செங்குந்தா இந்துக் கல்லூரி மைதானத்தில் போட்டி நடைபெற்றது. இதில் சங்கிலியன் சனசமூக நிலையம் வெற்றிபெற்றது.

- யாழ் செய்தியாளர்
சென்னை அணியின் தலைவராக தோனி
