விசுவாசுவ தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு

விசுவாசுவ தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு

விசுவாசுவ தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு: தமிழர் ஆண்டிலேயே பிரபவ எனும் வருடத்தில் தொடங்கி அட்சய எனும் வருடம் வரை 60 வருட கால சுழற்சியில் விசுவாசுவ வருடம் என்பது 39 ஆவது வருடமாக திகழ்கிறது.

விசுவாசுவ என்றால் நேர்மையான பண்பாளர் , தயாள சிந்தனையாளர் செல்வந்தர் என்று பொருள்.

நிகழும் மங்கலகரமான குரோதி வருஷம் நிறைவுற்று இப்புதிய “விசுவாசுவ” வருஷமானது பங்குனி மாதம் 30ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு (2025.04.14) 02 .29 மணியளவில் பிறக்கின்றது.

அதாவது, ஆங்கில திகதி 14.04.2025 சரியாக திங்கட்கிழமை அதிகாலை 2.29 இற்குப் இப் புதிய வருடம் பிறக்கிறது.

இந்த நாளில் அனைவரும் சங்கற்பித்து மருத்து நீர் தேய்த்து நீராடி, புத்தாடையணிந்து சிவசின்னங்களைத் தரித்து தீபம், நிறைகுடம் கண்ணாடி, பசு போன்ற மங்கலப் பொருள்களில் முக தரிசனம் செய்து ஆலய வழிபாடாற்றி பெற்றோர் குரு ஆகிய பெரியோர்களின் நல்லாசி பெற்று அறுசுவை உண்டிகளுண்டு இன ஜன பந்துக்களுடன் அளவளாவி மங்கலகரமாக வாழ வாழ்த்துகள்.

விசுவாசுவ தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு சிறப்புற மருத்துநீர் தேய்க்க புண்ணிய காலம்
விசு புண்ணிய காலமான 2025.04.13ஆம் திகதி இரவு 10. 29 தொடக்கம் மறுநாள் 2025.04.14ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6.29 வரை மருத்துநீர் தேய்த்து நீராடலாம்.

காலுக்கு இலவமிலை, தலைக்கு – ஆலிலை வைத்து ஸ்நானம் செய்ய வேண்டும்.
அதன் போது நோக்கி நிற்க வேண்டிய திசை: வடக்கு இவ்வாண்டு ஆடையின் நிறம்: சிவப்பு, நீலம் கலந்தது.


கைவிஷேடம்:
2025.04:14ஆம் திகதி திங்கள் காலை 9.10 – 11.45 மணி வரை…

புத்தாண்டு விஷேட பூஜை செய்யும் நேரம்:
2025.04.14ஆம் திகதி அதிகாலை 2.30 இற்கு…

12 இராசிகளுக்குமான வரவு செலவு விபரங்கள்

மேஷம் – 2 வரவு 14 செலவு
இடபம் – 11 வரவு 5 செலவு
மிதுனம் – 14 வரவு 2 செலவு
கடகம் – 14 வரவு 8 செலவு
சிம்மம் – 11 வரவு 11 செலவு
கன்னி – 14 வரவு 2 செலவு
துலாம் – 11 வரவு 5 செலவு
விருச்சிகம் – 2 வரவு 14 செலவு
தனுசு – 5 வரவு 5 செலவு
மகரம் – 8 வரவு 14 செலவு
கும்பம் – 8 வரவு 14 செலவு
மீனம் – 5 வரவு 5 செலவு

மதுபான சாலைகள் 3நாள் பூட்டு

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025

Copyright © All rights reserved. MATHEMURASU | CoverNews by AF themes.