தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: கொழும்பு மாநகர சபை உட்பட 18 உள்ளூராட்சி நிறுவனங்களுக்காக எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நீக்கி உத்தரவிட்டது.

அந்த உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ள உத்தரவு பிறப்பித்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

சட்ட மாஅதிபரால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையை பரிசீலித்த பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் மொஹமட் லபார் தாஹிர் மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

வாக்குமூலம் வழங்க நான் தயார்!

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025

Copyright © All rights reserved. MATHEMURASU | CoverNews by AF themes.