மர்வின் சில்வாவுக்கு மீண்டும் விளக்கமறியல்

மர்வின் சில்வாவுக்கு மீண்டும் விளக்க மறியல்

மர்வின் சில்வாவுக்கு மீண்டும் விளக்கமறியல்: முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை ஏப்ரல் 21 ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டுள்ளது.

காணி மோசடி சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட மேலும் மூன்று பேரை ஏப்ரல் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கிரிபத்கொடை பகுதியில் அரசாங்கத்திற்குச் சொந்தமான காணியை போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக, அண்மையில் மெர்வின் சில்வாவை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்திருந்தது.

அத்துடன் தற்போது தலைமறைவாக உள்ள பிரசன்ன ரணவீர மற்றும் மில்ரோய் பெரேரா ஆகியோரைக் கைது செய்யுமாறும் மஹர நீதவான் நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது.

மூன்று மாதம் தடுத்துவைக்கப்பட்டவர் மூன்று வாரத்தில் விடுவிப்பு


Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025

Copyright © All rights reserved. MATHEMURASU | CoverNews by AF themes.