எரிபொருள் நிலைய தீவிபத்தில் நால்வர் உயிரிழப்பு

எரிபொருள் நிலைய தீவிபத்தில் நால்வரி உயிரிழப்பு

எரிபொருள் நிலைய தீவிபத்தில் நால்வர் உயிரிழப்பு: குருநாகல், வெஹர பகுதியில் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் உட்பட நால்வர் உயிரிழந்தனர்..

நேற்று (07) இரவு 11 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் குருநாகல் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குருநாகல் மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவு இணைந்து தீயைக் கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு வந்த லொறி ஒன்றுக்கு வாயு நிரப்பும் போது, 6,000 லீற்றர் கொள்ளளவு கொண்ட இரண்டு வாயுத் தொட்டிகளில் ஒன்று வெடித்ததால் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

வெடிக்காத மற்றொரு 6,000 லீற்றர் வாயுத் தொட்டியை மாநகர சபை ஊழியர்கள் மிகுந்த முயற்சியுடன் மூடியதால், ஏற்படவிருந்த பாரிய சேதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

எரிபொருள் நிலைய தீவிபத்தில் நால்வர் உயிரிழப்பு சம்பவம் குருநாகல் பகுதியில் நேற்றிரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மூன்று மாதம் தடுத்துவைக்கப்பட்டவர் மூன்று வாரத்தில் விடுவிப்பு

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025

Copyright © All rights reserved. MATHEMURASU | CoverNews by AF themes.