ஐஎம்எப் நாலாம் கட்ட பேச்சு

ஐஎம்எப் நாலாம் கட்ட பேச்சு: ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று(07) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இலங்கை அரசாங்கம் – சர்வதேச நாணய நிதியம் இடையிலான நீடிக்கப்பட்ட கடன் வசதி வேலைத்திட்டத்தின் (EFF) நான்காவது மீளாய்வு தொடர்பான ஆரம்ப கட்டக் கலந்துரையாடல் நடைபெற்றது.

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் போது இலங்கை இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம், எதிர்கால நிதி இலக்குகளை அடைவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பைத் தொடர்ந்து இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார சவால்கள் குறித்தும் இரு தரப்பினரும் கவனம் செலுத்தினர்.

பிரதமர் மோடி நாடு திரும்பினார்

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025