உள்ளூராட்சித் தேர்தல் செயற்பாட்டுக்கு இடைக்காலத்தடை

தொங்குசபைகள் அமையும் வாய்ப்பு அதிகம்

உள்ளூராட்சித் தேர்தல் செயற்பாட்டுக்கு இடைக்காலத்தடை : கொழும்பு மாநகர சபை உட்பட பல உள்ளூராட்சி நிறுவனங்களில் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (07) இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

பல அரசியல் கட்சிகளும் சுயாதீனக் குழுக்களும் தங்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்துள்ள ரிட் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

இந்த மனுக்கள் மீதான ஆட்சேபனைகளை மே 5ஆம் திகதிக்கு முன் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனுதாரர்களின் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் மே 7ஆம் திகதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சித் தேர்தல் செயற்பாட்டுக்கு இடைக்காலத்தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, மனுக்கள் மீதான விசாரணைகளை மே 16ஆம் திகதி எடுத்துக்கொள்ள திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அந்தத் திகதி வரை இந்த இடைக்காலத் தடை உத்தரவு அமுலில் இருக்கும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்று கூறி, வேட்புமனுக்களை நிராகரிக்க தேர்தல் அதிகாரிகள் எடுத்த முடிவை சட்டவிரோதமானது என்று அறிவிக்கக் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

நல்லமா சாமரவுக்கு மீண்டும் விளக்கமறியல்

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025