மூன்று மாதம் தடுத்துவைக்கப்பட்டவர் மூன்று வாரத்தில் விடுவிப்பு

மூன்று மாதம் தடுத்துவைக்கப்பட்டவர் மூன்று வாரத்தில் விடுவிப்பு: இஸ்ரேலுக்கு எதிராக சுவரொட்டி ஒட்டிய குற்றச்சாட்டில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர், மூன்று வாரத்தில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய மூன்று மாதத் தடுப்புக் காவலில் வைக்கப்படிருந்த மொகமது உருஷ்தி என்ற இளைஞரே இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்தும் இஸ்ரேலிய படையினரைக் கண்டித்தும் சுவரொட்டி ஒட்டியதாகக் கடந்த மார்ச் 22ஆம் திகதி மொகமது உருஷ்தியை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைதுசெய்திருந்தனர்.
அவரது கைதுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பும் விமர்சனமும் முன்வைக்கப்பட்டு வந்தது. ஜனாதிபதி அனுர அரசும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைக் கையில் எடுக்கிறதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
எவ்வாறாயினும், பொது மக்களின் கேள்விகளுக்குப் பதில் வழங்கப்படவில்லை. அந்த இளைஞர் இன்று மாலை விடுவிக்கப்பட்டார்.
மைத்திரிபால சிறிசேன சிஐடியில் வாக்குமூலம்
