தபால் வாக்களிப்பு விண்ணப்பம் நீடிப்பு

தபால் வாக்களிப்பு விண்ணப்பம் நீடிப்பு: எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்காளர் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இன்று (12) நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடையவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி மார்ச் மாதம் 17ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிவரை நீடிக்கப்படுவதாக ஆணைக்குழு அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குத் தயார்
