ஜனாதிபதிக்கு ஐஎம்எப் பணிப்பாளர் வாழ்த்து

ஜனாதிபதிக்கு வாழ்த்து

ஜனாதிபதிக்கு ஐஎம்எப் பணிப்பாளர் வாழ்த்து: இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை வாழ்த்துவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளரான கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் காணொலி தொழினுட்பம் மூலம் நடத்தப்பட்ட சந்திப்பு பற்றி அவர் தனது ‘X’ தள பதிவில் தெரிவித்துள்ளார்.

முதலீட்டை ஈர்த்து வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதன் அவசியம் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்..

சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டுதலின் கீழ் தொடர்ச்சியான சீர்திருத்தங்களின் முக்கியத்துவம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

ஜனாதிபதி – மின்சாரசபை அதிகாரிகள் சந்திப்பு

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025

Copyright © All rights reserved. MATHEMURASU | CoverNews by AF themes.