காசாவில் 12300 பெண்கள் படுகொலை

காசாவில் பெண்கள் படுகொலை

காசாவில் 12300 பெண்கள் படுகொலை: காசா மீது கடந்த ஒன்றரை ஆண்டு காலம் இஸ்ரேல் மேற்கொண்ட போரில் இதுவரை 12 ஆயிரத்து 336 பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சர்வதேச மகளிர் நாளில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எகிப்து தலைமையில் முன்மொழியப்பட்டிருக்கும் காசா மீள் கட்டுமானத் திட்டத்திற்கு நான்கு ஐரொப்பிய நாடுகளும் முஸ்லிம் ஒத்துழைப்பு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

அதேபோன்று யேமன் ஹவுத்தி குழு காசாவுக்கான உணவு விநியோகத் தடையை நீக்குவதற்கு இஸ்ரேலுக்கு நான்கு நாள் கால அவகாசம் வழங்கியுள்ளது.

இதையும் படியுங்கள்:

புதிய உடன்பாடு இல்லாமல் முடிவடைந்த போர்நிறுத்தம்

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025