கனிமொழி கருணாநிதி

தமிழகத்தில் கல்வி முன்னேறி உள்ளது என்று கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.

“தமிழ்நாட்டை எளக்காரமாக நினைப்பதும், தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் வாக்களிக்க மாட்டார்கள் என்ற காரணத்தினால் மட்டுமே மத்திய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது” என்று கனிமொழி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் அவர்களின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் முதல்வரின் மனிதநேய விழா-2025 கொண்டாடப்பட்டு வருகிறது..அதன் ஒரு பகுதியாக, சென்னை கிழக்கு மாவட்ட திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சுதாதீனதயாளன் தலைமையில் மகளிர் அணியின் 500 நிர்வாகிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினரும் கழக துணைப் பொது செயலாளருமான கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு முன்னதாக தமிழ் மொழியையும் விடமாட்டோம் தமிழையும் விடமாட்டோம் தமிழ்நாட்டையும் விடமாட்டோம் என்ற உறுதி மொழி ஏற்பு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் வெற்றிஅழகன் மற்றும் பகுதி மகளிரணி அமைப்பார்கள், நிர்வாகிகள், கழக உறுப்பினர்கள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்..

தமிழகத்தில் கல்வி முன்னேறி உள்ளது என்று நிகழ்ச்சியில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினரும் கழக துணைப் பொது செயலாளருமான கனிமொழி கருணாநிதி ;

தமிழ்நாட்டில் உரிமைகளை பாதுகாக்க வேண்டும், அதேபோன்று நமது மொழியை பாதுகாக்க வேண்டும் நமது பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் இதுவே தமிழக முதலமைச்சரின் பிறந்தநாள் செய்தியாக இருக்கிறது…

தேர்தல் வரும் காரணத்தினால் மாநில உரிமையை பற்றி பேசுகிறார்களா என்று கேட்கிறார்கள்? அவர்களுக்கு மறுபடியும் சொல்லும் ஒரே பதில் சட்டமன்றத் தேர்தல் நிச்சயம் திமுக வெற்றி பெற்று தமிழகத்திற்கு தொடர்ந்து மக்கள் பணி செய்யும்..

பாஜக ஒன்றும் கிடையாது தமிழ்நாட்டில் மலரவே மலராது..

நாங்கள் மக்களிடம் உங்களைப் பற்றி பேசி உங்களுக்கு முக்கியத்துவம் தரும் அளவிற்கு எந்த அவசியமும் கிடையாது.

தமிழ்நாட்டின் உரிமைகளைப் பற்றி தற்போது பேசுகிறோம் என்றால் அதற்கான கட்டாயத்திற்கு நாங்கள் தள்ளப்பட்டு இருக்கிறோம்.

நாங்களாக சண்டைக்கு போகவில்லை ஆனால் வந்த சண்டையை விட மாட்டோம்….

நீங்களாக தான் வருகிறீர்கள் சண்டைக்கு…

மிக முக்கியமான பிரச்சினை மும்மொழிக் கொள்கை…

தமிழ் ஆங்கிலம் இரு மொழிக் கொள்கை இருக்கிறது தேவை என்றால் அவர்கள் மூன்றாவதாக ஒரு மொழியை படிக்கட்டும்… ஆனால் மூன்றாவதாக ஒரு மொழியை கட்டாயமாக திணிப்பது தான் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்கிறோம்.

தமிழ்நாட்டு மக்கள் ரத்தத்தை வியர்வையும் சிந்தி தந்திருக்கக் கூடிய பணத்தை தங்களின் பிள்ளைகளுக்கு கல்விக்கு கொடுக்க மாட்டேன் என்று சொல்வது அந்த மிரட்டலை நோக்கி வைக்கிறீர்கள்.பிளாக் மெயில் பண்ணுவது நாங்கள் இல்லை நீங்கள் தான்…

அண்ணா மற்றும் கலைஞரின் பிள்ளைகள் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க மாட்டோம்.

நான் இத்தனை வருடமாக இருக்கிறேன் எனக்கு ஹிந்தி தெரியாது எனக்கு கற்க வேண்டிய அவசியமில்லை.