இந்திய அணியில் ஏற்பட்ட தீடீர்சோகம்

இந்திய அணியில் ஏற்பட்ட தீடீர்சோகம்: சாம்பியன்ஷிப் ட்ரோபி, 15 போட்டிகள் கொண்ட தொடராக நடைபெற்று வருகின்றது. கடந்த பிப்ரவரி 19ம் தேதி தொடங்கிய இந்த தொடர், வருகின்ற மார்ச் மாதம் 9ம் தேதி வரை தொடரும்.
குரூப் A அணியை பொறுத்தவரை, 6 புள்ளிகளுடன் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. அதே போல 1 புள்ளியுடன் பாகிஸ்தான் அணி 4வது இடத்தில் உள்ளது.
இந்த 2025ம் ஆண்டு சாம்பியன்ஷிப் போட்டிகளை பொறுத்தவரை இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், இந்திய அணியில் ஒரு மிகப்பெரிய சோகம் ஏற்பட்டுள்ளது. இந்திய அணியின் மேலாளர் தேவ்ராஜ், தனது குடும்பத்தில் ஏற்பட்ட சோக நிகழ்வில் பங்கேற்க இப்பொது திடீரென இந்திய அணியில் இருந்து விலகியுள்ளார்.
தேவராஜின் தாயார் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இந்த சோக செய்தி கிடைத்ததும், தேவ்ராஜ் உடனடியாக ஹைதராபாத் புறப்பட்டுள்ளார் என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தேவ்ராஜ் தற்போது ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் (HCA) செயலாளராக பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த இக்கட்டான சூழலில் மேலாளர் தேவ்ராஜ், மீண்டும் தனது நிர்வாகப் பணிகளைத் தொடர்வாரா என்பது குறித்த தகவல்கள் இல்லை. ஆனால் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறும் அரையிறுதிப் போட்டியின் முடிவின் அடிப்படையில் தான் அந்த முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“எங்கள் செயலாளர் தேவ்ராஜின் தாயார் கமலேஸ்வரி காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். தேவ்ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று HCA வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.