கீத் நொயர் கடத்தப்பட்ட சம்பவம்

கீத் நொயர் கடத்தல்

கைதான இருவருக்கும் கல்கிஸை நீதிமன்றம் பிணை

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நேற்று கைதான இரண்டு சந்தேக நபர்களை கல்கிஸை நீதிமன்றம் இன்று பிணையில் விடுவித்துள்ளது.

சந்தேக நபர்களை நேற்று (01) குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நவகத்தேகம மற்றும் உலுக்குளம் பகுதிகளைச் சேர்ந்த 42 மற்றும் 46 வயதுடைய இராணுவ புலனாய்வு பிரிவில் கடமையாற்றி ஓய்வுபெற்றவர்களாவர்.

பத்திரிகையொன்றின் ஆசிரியராக பணியாற்றி வந்த ஊடகவியலாளர் கீத் நொயார், 2008 மே மாதம் கடத்தப்பட்டு தாக்கப்பட்டார், மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இராணுவ வீரர்கள் உட்பட சந்தேக நபர்கள் சிலர் முன்னர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025

Copyright © All rights reserved. MATHEMURASU | CoverNews by AF themes.