பிரித்தானிய சர்வதேச அமைச்சர் ராஜினாமா

பிரிட்டிஷ் அமைச்சர்

பிரித்தானிய சர்வதேச அமைச்சர் ராஜினாமா: வெளிநாடுகளுக்கு உதவியளிப்பதற்கான நிதி ஒதுக்கீட்டை பிரித்தானிய பிரதமா் கியொ் ஸ்டார்மர் வெகுவாகக் குறைத்துள்ளதைத் தொடா்ந்து, சா்வதேச மேம்பாட்டுத் துறை அமைச்சா் அன்னிலீஸ் டாட்ஸ் தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.

இது குறித்து அவா் எழுதியுள்ள ராஜினாமாக் கடிதத்தில்,

‘பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டியது அவசியம்தான் என்றாலும், அதற்காக வெளிநாட்டு உதவிகளுக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய பாதுகாப்புக்கு இனி முன்னுரிமை தரப் போவதில்லை எனவும் அந்தப் பிராந்தியத்தைச் சோ்ந்த நாடுகளே தங்கள் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்துக்கொள்ள வேண்டும் எனவும் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான புதிய அமெரிக்க அரசு வலியுறுத்திவருகிறது.

இதன் எதிரொலியாக, பாதுகாப்புத் துறைக்கான தங்களது பட்ஜெட் ஒதுக்கீட்டை பிரித்தானிய அரசு இந்த வாரம் உயா்த்தியது. எனவே இதற்காகத்தான் , வெளிநாடுகளுக்கு நிதியுதவி அளிப்பதற்காக ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025