உடன்பாடு இல்லாமல் முடிவடைந்த போர்நிறுத்தம்

கோப்புப் படம்
உடன்பாடு இல்லாமல் முடிவடைந்த போர்நிறுத்தம்: இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்தம் புதிய உடன்பாடு எட்டப்படாமல் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.
இதனால், இஸ்ரேல் பேரழிவு போரைத் தொடங்கலாம் என்று பலஸ்தீனர்கள் அச்சத்தில் உள்ளனர்.
தற்போதைய முதல் கட்ட போர் நிறுத்தத்தைத் தொடரலாம் என்ற இஸ்ரேலின் யோசனையை ஹமாஸ் நிராகரித்துவிட்டதால், புதிய உடன்பாடு எட்டப்படவில்லை என்று சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பேச்சுவார்த்தைக்காக எகிப்தின் கெய்ரோ நகர் சென்றிருந்த இஸ்ரேல் பிரதிநிதிகள் நாடு திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு பாதுகாப்புத் தரப்பினருடன் ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.