சஞ்சீவ கொலைதொடர்பாக 12பேர் கைது

சஞ்சீவ கொலைதொடர்பாக 12பேர் கைது: கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய மேலும் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினரால் மினுவாங்கொடையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இந்தச் சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர்.
குற்றத்தை வழிநடத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட தொலைபேசி சிம் அட்டையை வழங்கிய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.