தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இன்று (11) நள்ளிரவு முதல் கியூஆர் முறைமைக்குப் புறம்பாகப் பெட்ரோல் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
எனினும், ஒற்றை, இரட்டை இலக்க விதிகள் பின்பற்றப்படும் என்றும் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
புத்தாண்டு காலத்தில் மக்களுக்குச் சலுகை வழங்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
