அமெரிக்க – ஈரான் போர் நிறுத்தத்தில் கீறல் ஏற்படும் அளவுக்கு லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
போர் நிறுத்த அறிவிப்புக்குப் பின்னர் லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய கடும் தாக்குதலில் 254 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனையடுத்து அந்நாட்டில் ஒரு நாள் தேசிய துக்க தினம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தையடுத்து போர் நிறுத்தத்தில் லெபனானும் உள்வாங்கப்பட வேண்டும் என்று குரல் எழுப்பப்பட்டுள்ளது. இஸ்ரேலின் தாக்குதலை இத்தாலி கண்டித்துள்ளது.
லெபனான் மீதான தாக்குதலையடுத்து ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறப்பதை ஈரான் ஒத்திவைத்துள்ளது. ஆனால், ஹோர்முஸ் திறக்கப்படாவிட்டால், மீண்டும் தாக்குதல் தொடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானை எச்சரித்துள்ளார்.
பெரும்பாலும் சமாதானம் ஆபத்தின் விளிம்பில் இருக்கிறது.
வி. அருள்செல்வன்
