அமெரிக்கா ஈரான் மீது இரு வார போர் நிறுத்தம் அறிவிப்பு

அமெரிக்கா ஈரான் மீது இரு வார போர் நிறுத்தம் அறிவித்துள்ளது.

ஈரானிய ஆன்மிகத் தலைவர் மொஜ்தபா கமேனி தாக்குதலை நிறுத்துமாறு தனது இராணுவத்திற்கு உத்தரவிட்டதையடுத்து அமெரிக்கா இருவார போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், போர் நிறுத்தம் செய்வதற்கு ஈரான் 10 அம்ச கோரிக்கையை முன்வைத்திருக்கிறது. போரா, சமாதானமா? என்பதை இந்த இரு வவாரம் தீர்மானிக்கும் என்று சொல்லப்படுகிறது.

ஈரானுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. பெரும்பாலும் இந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தானில் பேச்சு தொடங்கப்படலாம் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.