திருமதி உலக அழகிப் போட்டியில் தாய்லாந்து பெண் உலக அழகியாக மகுடம் சூடிக்கொண்டார்.
இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கலந்துகொண்ட சபீனா யூசுப் இறுதிப் போட்க்கான மூவரில் ஒருவராகத் தெரிவானார்.
இறுதிப் போட்டியில் சபீனா யூசுப் மூன்றாம் இடத்தைப் பெற்றார்.
அமெரிக்காவில் இன்று நிறைவடைந்த உலக திருமதி அழகிப் போட்டியில் அமெரிக்காவுக்கு இரண்டாமிடம் கிடைத்தது.
41ஆவது தடவையாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 60 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்துகொண்டனர்.
