முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று விசாரிக்கப்படுகிறது.
பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு, இன்று (28) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளபடுகிறது.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில், அவரது மனைவியான பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக இலண்டன் செல்வதற்கு அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
