சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன புதுடில்லி மாநாட்டில் பங்கேற்பு

புதுடில்லியில் கடந்த ஜனவரி 14ஆம் திகதி முதல் 18ஆம் திகதிவரை நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் சபாநாயகர்கள் மாநாட்டில் இலங்கை சபாநாயகர் (மருத்தவர்) ஜகத் விக்கிரமரத்ன கலந்துகொண்டார்.

44 நாடுகளின் சபாநாயகர்கள், பிரதி சபாநாயகர்கள் பங்குபற்றிய இந்த மாநாட்டை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைத்தார்.

இதில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுடன் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோகணதீர, பாராளுமன்ற நிர்வாக உதவிப் பணிப்பாளர் காஞ்சன ருச்சித்த ஹேரத் அகியோரும் கலந்துகொண்டனர்.

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு இந்திய லோக் சபா சபாநாயகர் ஓம் பிர்லா நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார்.