அமெரிக்காவில் கடும் பனிப்புயல் தாக்கி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2 பனிப்புயல் தாக்கியது. தற்போது 3-வது பனிப்புயல் உருவாகி இருக்கிறது. இந்த புதிய பனிப்புயல் அதி தீவிர பனிப்புயலாக மாறி உள்ளது.
இதனால் 5.5 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொலராடோ மாகாணத்தின் ரொக்கி மலைப்பகுதியில் ஒரு அடி உயரத்திற்கு பனி விழுந்துள்ளது. கன்சாஸ் சிட்டியில் 10 செ.மீ., அளவும், செயின்ட் லுாயிசில் 7 செ.மீ., அளவும் பனி பதிவாகியுள்ளது.
அமெரிக்காவின் வடமேற்கில் மோண்டானா முதல் கிழக்கு கடற்கரையில் உள்ள மைனே வரை 2,500 கி.மீ., நீளத்துக்கு 27 மாகாணங்களுக்கு அதிதீவிர பனிப்புயல் எச்சரிக்கையை வானிலை நிலையம் விடுத்துள்ளது.
